>
தமிழ் லைவ்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்

முதியோர்களுக்கான ஆசான் 4 ஃபீச்சர் போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது

 Image result for iball senior citizen phonehttps://ad.admitad.com/g/rb1qie435bb21df68c45a80d05f527/
       
ஐபால் நிறுவனம் வடிவமைத்துள்ள ஆசான் 4 ஃபீச்சர் போன், 3,499 ரூபாய்க்கு இந்தியாவில் வெளியாகி உள்ளது
முதியோர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆசான் 4 போன், பெரிய கீபேட், பெரிய ஆன்-ஸ்க்ரீன் எழுத்துக்கள், சிறந்த ஆடியோ, அவசர அழைப்பு சப்போர்ட், மொபைல் டிராக்கிங் என்று பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. டூயல் சிம், 2.31 இன்ச் டிஸ்ப்ளே, பிரெய்லி கீபேட் போன்றவை இடம் பெற்றுள்ளது.

 
மேலும், 1800mAh  பேட்டரி, 32 ஜிபி மைக்ரோ எஸ்டி ஸ்டோரேஜ் சப்போர்ட்,  200 குறுஞ்செய்திகள், 1000 போன் நம்பர்கள் ஸ்டோர் செய்யும் வசதி கொண்டுள்ளது
அவசர அழைப்பு வசதி முதியோர்களுக்கான முக்கிய பயன்பாடாக ஆமைந்துள்ளது. அது மட்டுமின்றி, மொபைல் டிராக்கிங் ஃபீச்சர் போன்ற வசதிகளும் உள்ளது. மேலும், போன் லாக்கிற்கான ஒன் டச் வசதி, எல்இடி டார்ச், வையர்லெஸ் எப்.எம், முதியோர்கள்  எளிதாக பயன்படுத்தும் வகையிலான வசதிகளை கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு உள்ளது.


No comments