>
தமிழ் லைவ்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்

LinkedIn-ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம்

LinkedIn-ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம்
இந்தப் புதிய அம்சம், ஆண்டிராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் தொலைபேசிகளின் செயலிகளில் கிடைக்கும். இன்னும் சில வாரங்களில் உலகம் முழுவதும் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகமாக உள்ளது. 
தன் தளத்தில் மெசேஜ் அனுப்புவதை எளிமையாக்கிய சில தினங்களிலேயே அடுத்த அதிரடியாக தனது மொபைல் செயலிகளில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது லிங்க்டு-இன். இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது. இதனால் பயனர்கள் தங்கள் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு எளிதில் தொடர்பு கொள்ள முடியும். தொடக்க கட்டமாக இந்த வசதி ஆண்டிராய்ட், ஐ.ஓ.எஸ் ஃபோன்களில் உள்ள செயலிகளில் அறிமுகமாகிறது. சென்ற வாரம் அறிமுகமான அப்டேட்டில், மெசேஜ் பாக்ஸினை தேவைப்பட்ட அளவுக்கு இழுத்துக் கொள்வது, கோப்புகளை அனுப்பும் அட்டாச்மென்ட் வசதிக்குத் தனி ஐகான், பயனர்களுக்கு (@)மென்சனைக் குறிப்பது ஆகிய புதிய அம்சங்களை லிங்க்டு-இன் அறிமுகம் செய்திருந்தது. 
linkedin voice messaging LinkedIn voice messaging
குரல் பதிவுகளை அனுப்புவது ஏற்கனவே வாட்சப், வீ-சாட் போன்ற செயலிகளில் பிரபலாக இருந்து வருகிறது. லிங்க்டு-இன்னில் குரல்பதிவுகளை அனுப்பும் வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் தொழில் சார்ந்த நட்புகளுடன் இன்னும் சிறப்பான, நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று இந்நிறுவனம் கருதுகிறது. மேலும் கால் செய்வதைவிட வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது புது அனுபவத்தைத் தரும் என்றும் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
இது ஒருபுறம் இருந்தாலும், இந்த வசதியால் தேவையற்ற ஆஃபர்கள், விளம்பரங்கள் அனைத்தும் ஸ்பாம்களாக வரும் எனவும் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். 
வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி? 
கீபேடில் உள்ள மைக் ஐகானை அழுத்திப் பிடித்து நமது செய்தியைப் பதிவு செய்யலாம், பதிவுசெய்து முடித்தவுடன் ரிலீஸ் செய்தால் செய்தி அனுப்பப் பட்டு விடும். கேன்சல் செய்ய மைக் ஐகானை அழுத்திப்பிடித்தவாறு கீழே இழுக்க வேண்டும். 

No comments